CINEMA
வெளியானது “அகிலம் நீ” பாடல்: அன்னையர் தின ஸ்பெஷல்!
கே. ஜி. எஃப் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா செண்டிமென்டில் நம்ம கலங்கவைத்த “அகிலம் நீ” பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கே. ஜி. எஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் ஆயிரம் கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது, இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களுக்கு goosebumps –ஐ கிளப்பியது.
எனினும் படத்தின் கருவே தாய் செண்டிமென்ட் தான். “தன்னானினானே” என்ற வரி வரும்போதெல்லாம் நம்மையும் அறியாமல் நம் கண்களில் நீர் சுரக்கும். குறிப்பாக திரைப்படத்தில் இடம்பெற்ற “அகிலம் நீ” என்ற பாடலை நாம் மறந்திருக்க முடியாது.
தாய் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மரக்கிளையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழுகிறது. அப்போது தாய் “அகிலம் நீ” என்ற பாடலை பாடி குழந்தையை தூங்க வைக்கிறாள்.
எப்போதும் குழந்தை அழுகும் போது தாலாட்டு தான் பாடுவார்கள். ஆனால் இது வீரத் தாலாட்டாக குழந்தையின் வருங்காலத்தின் கனவுகளையும் லட்சியங்களையும் அது அடைய வேண்டிய இலக்கையும் தொனிக்கும் பாடலாக அமைந்திருக்கும். இப்பாடல் திரையில் தோன்றிய போது பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் புள்ளரித்தது.
இந்நிலையில் அன்னையர் தினமான இன்று “அகிலம் நீ” பாடல் யூட்யூப் தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வந்தது. அதே போல் தற்போது வெளியாகியுள்ளது. அன்னையர் தினத்தில் ஒரு தாயின் வீரத் தாலாட்டுப் பாடலை வெளியிட்டது ரசிகர்களை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மட்டுமன்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்பாடல் இன்று ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.