Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனோடு ஜோடி சேரும் ஷங்கரின் மகள்.. அதிகாரப்பூர்வ அப்டேட்

CINEMA

சிவகார்த்திகேயனோடு ஜோடி சேரும் ஷங்கரின் மகள்.. அதிகாரப்பூர்வ அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருடன் ஜோடி சேரப்போகிறார்.

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயிண்மென்ட் சார்பாக சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் அதிதி ஷங்கர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்தான ஒரு சுவாரசியமான அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கவுள்ள “மாவீரன்” திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார். “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

சிவகார்த்திகேயன் தற்போது பல திரைப்படங்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கிய “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது.

இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி ஜோடி சேர்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசனும் சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் தான் “மாவீரன்” திரைப்படமும் உருவாக உள்ளது. இத்திரைப்படத்தில் தமிழின் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளார் என சமீபத்தில் ஒரு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top