Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“மாவீரன்” திரைப்படத்தில் அதிதி ஷங்கர் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

CINEMA

“மாவீரன்” திரைப்படத்தில் அதிதி ஷங்கர் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

“மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வரும் அதிதி ஷங்கருக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதில் அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளது. முத்தையா இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் “விருமன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரை வீரன்” என்ற பாடலையும் பாடியிருந்தார். இப்பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. மேலும் ஒரு புறம் இப்பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் முதலில் பாடினார் எனவும் சர்ச்சையும் எழுந்தது.

“விருமன்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுடன் “மாவீரன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அதிதி ஷங்கர் “மாவீரன்” திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்காக அதிதி ஷங்கர் 25 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது.

அதிதி ஷங்கரின் முதல் திரைப்படமான “விருமன்” திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இளைஞர்களின் கனவு கன்னியாக கூடிய விரைவில் திகழ உள்ளார் எனவும் அறியப்படுகிறது. “மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top