CINEMA
ஆட்டம் ஓவரா இருக்கே!.. அஜித் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்..
அஜித் குமாரின் “ஆலுமா டோலுமா” பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். “விருமன்” திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். தனது முதல் திரைப்படத்திலேயே பலரின் மனதை கவர்ந்துவிட்டார் அதிதி ஷங்கர்.
மேலும் “விருமன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுர வீரன்” என்ற பாடலையும் பாடி ஒரு சிறந்த பாடகி என்பதையும் நிரூபித்துவிட்டார்.
அதிதி ஷங்கர் செய்யும் மொக்கை காமெடிகளும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் பல மேடைகளில் மிகவும் கலகலப்பாக நடந்துகொள்கிறார். அவர் பேசினாலே சிரிப்பலைகள் எழுகின்றன.
இந்த நிலையில் அதிதி ஷங்கர் சமீபத்தில் ஒரு பிரபல கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அப்போது மேடையில் அஜித் குமாரின் “ஆலுமா டோலுமா” பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிதி ஷங்கர் நன்றாக நடனமும் ஆடுவார். “விருமன்” திரைப்படத்தில் அவரது நடனம் சிறப்பானதாக இருந்தது. சில கஷ்டமான ஸ்டெப்களையும் அதிதி ஷங்கர் மிகவும் எளிதாக ஆடியிருப்பார். இந்த நிலையில் தான் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிதி ஷங்கர் அஜித் பாடலான “ஆலுமா டோலுமா” பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Charming @AditiShankarofl dance ❤️#AditiShankar #Kollywood #Ajith #AjithKumar #Karthikeya2 #virumansuccessmeet #viruman #Janmashtami #surya42 #AK62 pic.twitter.com/dwD9mgxzzT
— Repeeatuu (@repeeatuu) August 20, 2022