CINEMA
“பத்து விரலுக்கு சேர்த்து ஜி எஸ் டி போடு”.. நடிகை வினோதினியின் குபீர் சிரிப்பூட்டும் வீடியோவை பாருங்க..
ஜி எஸ் டி குறித்து நடிகை வினோதினி கலகலப்பான ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நகைச்சுவை கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தனது யதார்த்த நடிப்பால் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் திறன் கொண்டவர் வினோதினி.
இவர் சமீபத்தில் “சூரரை போற்று”, “பாவக் கதைகள்”, “நாய் சேகர்”, போன்ற திரைப்படங்களில் தோன்றினார். தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் வினோதினி நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் கலகலப்பான ஆள் இவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிடும் பல வீடியோக்கள் குபீர் சிரிப்பை ஏற்படுத்துபவை. இவர் பதியும் வீடியோவுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் குபீர் சிரிப்பை கிளப்பும் விதமாக வினோதினி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஜி எஸ் டியை பங்கமாய் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.
“சாப்புட்டீங்களா?, வாங்க என்ன சாப்புட்டீங்க, ரசம் சாதமா? ரசத்துக்கு ஜிஎஸ்டி, சாதத்துக்கு ஜிஎஸ்டி, ரசத்துல ஊத்துன நெய்க்கு ஜிஎஸ்டி, நெய்க்கு ஊத்துன டால்டாக்கு ஜிஎஸ்டி, கடுகு தாளிச்சோமே அதுக்கு ஒரு ஜிஎஸ்டி, எண்ணெய்க்கு ஜிஎஸ்டி, ஸ்டவ்க்கு ஜிஎஸ்டி” என அடுக்கிக் கொண்டே போகிறார்.
அதன் பின் சாப்பிட்டவருக்கு பத்து விரல் இருப்பதனால் பத்து விரலுக்கும் ஜிஎஸ்டி போடச்சொல்கிறார். சாப்புட பயன்படுத்தியதால் விரல்களுக்கு ஜிஎஸ்டி, மேலும் சாப்பாட்டை முகர்ந்து பார்த்ததற்கு மூக்குக்கு ஜிஎஸ்டி என அடுக்கிக்கொண்டே போகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram