CINEMA
“கையில் Gun உடன் சுனைனா”.. வெறித்தனமா இருக்காங்களே!!
நடிகை சுனைனா கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த புதிய திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் க்யூட் கேர்ளாக வலம் வந்த சுனைனா சமீப நாட்களாக “ரெஜினா” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படத்தை டோமின் டிசில்வா இயக்கி உள்ளார். இவர் பிரபல மலையாளத் திரைப்படங்களான “பைப்பின் சுவட்டிலே பிரணயம்”, “ஸ்டார்” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
“ரெஜினா” திரைப்படத்தை எல்லோ பியர் புரொடக்சன் சார்பாக சதிஷ் நாயர் தயாரித்து உள்ளார். இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
“ரெஜினா” திரைப்படம் Women centric திரைப்படமாக உருவாகி உள்ளது. இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் டோமின் டிசில்வா “வீட்டை பார்த்துக் கொள்ளும் ஒரு House Wife திடீரென ஒரு அசாதாரண சூழலுக்கு தள்ளப்படுகிறார். அந்த அசாதாரண சூழல் அவரை ஒரு அசாதாரண பெண்ணாக மாற்றுகிறது” என கதையின் மையக் கருவை குறித்து கூறினார். முழு திரைப்படத்தையும் சுனைனாவே தாங்கி உள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது
சுனைனா மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் அறிமுகம் ஆனாலும் தமிழ் திரை உலகிற்கு “காதலில் விழுந்தேன்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.
அதன் பின் தமிழில் “மாசிலாமணி”, “வம்சம்” ஆகிய பல திரைப்படங்களில் நடித்த அவருக்கு “நீர் பறவை” திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் “வன்மம்”, “தெறி”, “நம்பியார்”, “கவலை வேண்டாம்”, “தொண்டன்”, “காளி”, “என்னை நோக்கி பாயும் தோட்டா”, “சில்லுக் கருப்பட்டி”, “டிரிப்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது “ரெஜினா” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே “எரியும் கண்ணாடி”, “லத்தி” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது.
View this post on Instagram