CINEMA
டி. ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி…
பிரபல நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்த டி. ராஜேந்தர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் உடல் நிலை தற்போது ஓரளவு தேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவுள்ளதாகவும் அவரது மகனும் நடிகருமான சிம்பு தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன. ஆனால் அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.
டி. ராஜேந்திரன் 1980-களில் தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனரும் ஆவார். அது மட்டுமல்லாது படத்தொகுப்பு, இசை, நடன இயக்குனர் என பல ரூபங்களையும் எடுப்பவர். பெரும்பாலான அவரது திரைப்படங்கள் தங்கை அண்ணன் பாசத்தை பேசக்கூடியதாக இருக்கும்.
“தங்கைக்கு ஓர் கீதம்”, “என் தங்கை கல்யாணி”, “தாய் தங்கை பாசம்” போன்ற திரைப்படங்கள் தங்கை அண்ணன் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திரைப்படம். அதே போல் காதலை கொண்டாடக்கூடிய பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
“ஒரு தலை ராகம்”, “மைதிலி என்னை காதலி”, “மோனிஷா என் மோனலிசா”, “சொன்னால் தான் காதலா”, “காதல் அழிவதில்லை” என பல வெற்றியடைந்த காதல் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் வசனங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக ரைமிங்கில் பேசும் பல வசனங்கள் இன்றளவும் பேசப்படுபவை.
இவரது மகன் சிம்புவை இவர் தான் சிறுவயது கதாப்பாத்திரமாக அவரது திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார். சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் யங் சூப்பர் ஸ்டாராக வளர்ந்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் டி. ராஜேந்தர் ஒர் அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது.
