Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரி”… வெறியேத்தும் புகைப்படங்கள்

CINEMA

“சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரி”… வெறியேத்தும் புகைப்படங்கள்

நடிகர் சூரி சிக்ஸ் பேக்ட்டில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ‘ஓ’ போட வைத்துள்ளன.

தொடக்கத்தில் பல திரைப்படங்களில் பெயர் வெளித் தெரியாமல் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சூரி, “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் புரோட்டா சூரியாக நமக்கு அறிமுகமானார்.

அதன் பின் காமெடிக்கு என்றே தனி ரூட் போட்டு பயணித்த அவர், பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாப்பாத்திரத்தில் கலக்கி வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படத்திலும் கூட நடித்திருந்தார். எனினும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான “சீம ராஜா” திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பித்தார் சூரி. அதன் பின் அவருக்கு அதில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது.

தனது கட்டுக்கோப்பான உடலை பெரிதும் கவனம் கொண்டு செதுக்கி வருகிறார் சூரி. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமான “விடுதலை” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மேலும் அதில் போலீஸாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் ஜிம்மில் இருந்தவாறு  சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சட்டை எதுவும் அணியாமல் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் தனது ஆர்ம்ஸை காட்டும் வகையிலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களில் அவர் “The Pain of today is the victory of tomorrow” என்று பதிவிட்டுள்ளார். அதாவது “இன்றைய வலி நாளைய வெற்றி” என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களை ‘ஓ’ போட வைத்துள்ளது. சூரி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப்புகைப்படங்கள் இளம் பெண்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)

Continue Reading

More in CINEMA

To Top