CINEMA
வீடு துடைக்கும் Mop குச்சியில் தேசிய கொடி.. சூரியோட மூளையே மூளை தான்..
வீடு துடைக்கும் Mop குச்சியில் தேசிய கொடியை சொருகி பறக்கவிட்ட நகைச்சுவை நடிகர் சூரியை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.
இன்று இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு சமீபத்தில் “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றவேண்டும் எனவும், சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக மாற்றி வந்தனர். மேலும் அவர்களது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூட தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். மேலும் விஜய்யும் தனது நீலாங்கரை வீட்டில் தேசிய கொடியை ஏற்றி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது சூரி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். ஆனால் அதில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது அவர் தேசிய கொடியை வீடு துடைக்கும் Mop-ல் சொருகி ஏற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
சூரி தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு!” என குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கம்மென்ட் பகுதியில் பலரும் சூரியை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்றே தனி ரூட் போட்டு பயணித்து வரும் சூரி தனது நகைச்சுவையால் பலரையும் ரசிக்கவைப்பவர். இவர் சமீபத்தில் “டான்”, “விருமன்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram