Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பிரபல நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்

CINEMA

பிரபல நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்

பிரபல நடிகர் சரத் சந்திரன் தற்கொலை செய்து கொண்ட செய்தி திரை உலகினில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தவர் சரத் சந்திரன். இவர் “அங்கமாலி டைரீஸ்”, “ஒரு மெக்சிகன் அப்ரதா”, “காம்ரேட் இன் அமெரிக்கா”, “கூடே”, “ஒரு தத்விக அவலோகனம்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வயது 37. இவர் சொந்த ஊர் கொச்சி மாவட்டம் கண்ணூர். ஆரம்பக் கட்டத்தில் ஐடி துறையில் பணியாற்றினார். அதன் பின் சினிமாவில் ஈடுபாடு கொண்டு பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார். அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு “அனீஸ்யா” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அங்கமாலி டைரீஸ்”, “கூடே” என பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி கண்ணூரில் உள்ள அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். மேலும் அவர் மரணத்திற்கு முன் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில் ‘என் மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல” என குறிப்பிடிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“அங்கமாலி டைரீஸ்” திரைப்படத்தில் சரத் சந்திரனுடன் இணைந்து நடித்த ஆண்டனி வர்கீஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சரத் சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த பதிவை வைத்து தான் அவர் இறந்த செய்தி அறியப்பட்டது.

சரத் சந்திரனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்த தகவல் இல்லை. எனினும் அவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற பெயரில் தம்பி இருக்கிறார். இவரது தாயார் பெயர் லீலா, தந்தையின் பெயர் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top