Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஜெய்பீம்” செங்கேணிக்கு உதவிய லாரன்ஸ்! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

CINEMA

“ஜெய்பீம்” செங்கேணிக்கு உதவிய லாரன்ஸ்! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

“ஜெய் பீம்” திரைப்படத்தில் நடித்த செங்கேணி கதாப்பாத்திரத்தின் நிஜ வாழ்வை வாழ்ந்த பார்வதிக்கு லாரன்ஸ் செய்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “ஜெய் பீம்”.  இத்திரைப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஸா விஜயன், பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர், இளவரசு ஆகியோர் முக்கிய  கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். டி. எஸ். ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை நசுக்கும் காவல் துறையினரை விமர்சித்து குரலற்றவர்களின் குரலாக ஒலித்திருந்தது “ஜெய் பீம்” திரைப்படம்.

ராஜாகண்ணுவாக நடித்திருந்த மணிகண்டன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் போலீஸிடம் அடிவாங்கும் காட்சிகள் அனைத்தும் படம் பார்த்தவர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.

சூர்யா வக்கீலாக சிறப்பாக நடித்திருந்தார் . இத்திரைப்படம் வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் “ஜெய் பீம்” திரைப்படம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது.

இந்நிலையில் செங்கேணி கதாப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கை உருவமான பார்வதிக்கு, நடிகர் லாரன்ஸ் ஒரு நல்ல தரமான வீடு கட்டித் தருவதாக இருந்தார். பார்வதி, வயது முதிர்ந்த நிலையில் ஒரு ஓட்டை உடசலான வீட்டில் தான் குடியிருக்கிறார். அவருக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தமிழக அரசு அவருக்கு வீடு கட்டித்தரும் என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து பார்வதிக்கு வீடு கட்டி தருவதாக ஒதுக்கி இருந்த பணத்தை பார்வதிக்கே தந்துள்ளாராம் லாரன்ஸ். லாரன்ஸ் பல ஏழை எளியோருக்கும் ஆதரவில்லாதவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார். அதே போல் பார்வதிக்கும் உதவி செய்துள்ளதாக வெளிவந்த செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top