CINEMA
ஷங்கரின் மகளை கடுமையாய் விமர்சித்த ஆத்மிகா??
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளதை தொடர்ந்து ஆத்மிகா ஒரு டிவிட்டை பகிர்ந்துள்ளார்.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த “விருமன்” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள்ளார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள்ளார். “மாவீரன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “செல்வாக்கு மிக்கவர்கள் மிகவும் எளிதாக மேலே வந்துவிடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள்…பாத்துக்கலாம்” என கூறியுள்ளார். நெட்டிசன்கள் இந்த டிவிட்டை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பலர் கமெண்ட் பகுதியில் “அதிதி ஷங்கரை தான் இவர் குறிப்பிட்டு சொல்கிறார்” என கூறி வருகின்றனர்.
It’s good to see privileged getting easy way through the ladder while the rest 🥲
Paathukalam 🙌🏽— Aathmika (@im_aathmika) August 4, 2022
ஆத்மிகா ஹிப் ஹாப் ஆதி நடித்த “மீசைய முறுக்கு” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் “கோடியில் ஒருவன்”, “நரகாசூரன்”, “காட்டேரி” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில் “நரகாசூரன்” திரைப்படம் சில பிரச்சனைகளால் இன்னும் வெளிவரவில்லை.
மேலும் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த “காட்டேரி” திரைப்படம் இன்று தான் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தான் ஆத்மிகா தற்போது இந்த டிவிட்டை பகிர்ந்துள்ளார்.
ஆத்மிகாவின் இந்த டிவிட் குறித்து நெட்டிசன்கள் பலர் கம்மெண்ட் செக்சனில் ஆறுதல்களை கூறி வருகின்றனர். “சினிமாவில் வாரிசுகள் நடிக்க வருவது என்பது புதிதல்ல, ஆனால் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம்” என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர் “அனுஷ்கா, த்ரிஷா என பலரும் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள் தான். இப்படி பலர் இருக்கிறார்கள். ஆதலால் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்” என கூறியுள்ளார்.
