Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“எவ்வளவு அழகான ஜோடி பொருத்தம் பாருங்க..” ஆதி-நிக்கி கல்ராணியின் திருமண வீடியோ இதோ..

CINEMA

“எவ்வளவு அழகான ஜோடி பொருத்தம் பாருங்க..” ஆதி-நிக்கி கல்ராணியின் திருமண வீடியோ இதோ..

“பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டுமே” என வர்ணிக்கும் வகையில் ஆதி-நிக்கி கல்ராணி தம்பதியினரின் திருமண வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

ஆதியும் நிக்கி கல்ராணியும் “மரகத நாணயம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்துள்ளனர். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் இரு வீட்டார் சம்மதத்தோடு உறவினர்கள், நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் “மரகத நாணயம்” திரைப்படம் மட்டுமல்லாது “யாகாவாரயினும் நா காக்க”, “மலுப்பு” போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த செய்தி பரவலாக அறியப்படவில்லை. திடீரென ஒரு நாள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. எனினும் நல்ல பொருத்தமான ஜோடி என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இவர்களின் திருமண வீடியோ வெளிவந்துள்ளது. ஆதி-நிக்கி கல்ராணி தம்பதியினரை பார்ப்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது போல் திருமண கோலத்தில் ஜொலிக்கிறார்கள்.

இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறது. காதல் ஜோடி என்றால் இப்படி இருக்கவேண்டும் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“அழகான வீடியோ”, “Lovely Pair”, “Cuties” போன்ற கம்மென்ட்டுகளை கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“மரகத நாணயம்” திரைப்படத்தில் நிக்கி கல்ராணி தற்கொலை செய்திருப்பார். அவருக்குள் ஒரு ஆணின் ஆவி புகுந்திருக்கும். ஆதி நிக்கி கல்ராணியை ஒரு தலையாக காதலித்திருப்பார். அத்திரைப்படத்தில் இருவரும் சேரமாட்டார்கள். அதுவே பார்வையாளர்களை கவலையடைய வைத்தது. ஆனால் தற்போது இருவரும் நிஜ வாழ்வில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aadhi Pinisetty (@aadhiofficial)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top