CINEMA
ஆதி-நிக்கி கல்ராணி கல்யாண வைபோகம்… குத்தாட்டம் போட்ட தம்பதியினர்
ஆதி – நிக்கி கல்ராணி திருமண விழாவில் மணமக்களாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றன.
ஆதியும் நிக்கி கல்ராணியும் “மரகத நாணயம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
“மரகத நாணயம்” திரைப்படத்தில் நிக்கி கல்ராணி தற்கொலை செய்திருப்பார். அவருக்குள் ஒரு ஆணின் ஆவி புகுந்திருக்கும். ஆதி நிக்கி கல்ராணியை ஒரு தலையாக காதலித்திருப்பார். அத்திரைப்படத்தில் இருவரும் சேரமாட்டார்கள்.
ஆனால் தற்போது இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்துள்ளனர். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு உறவினர்கள் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் “மரகத நாணயம்” திரைப்படம் மட்டுமல்லாது “யாகாவாரயினும் நா காக்க”, “மலுப்பு” போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
View this post on Instagram
பல ஆண்டுகளாக dating, romance என சுற்றி கொண்டிருந்தவர்களின் காதல் விஷயம் வெளியே தெரியவிடாமல் நாசுக்காக இருவரும் பார்த்துக் கொண்டனர். சினிமா வட்டாரங்கள் மத்தியில் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் திருமண தம்பதியினர் நேற்று மகிழ்ச்சியில் “ஆலுமா டோலுமா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது பார்ப்பவர்களின் கண்கள் படும் வகையில் மகிழ்ச்சியுடன் இணையராக பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளது பார்ப்பவர் மனங்களை கொள்ளையடித்துள்ளது.