CINEMA
அஜித் திரைப்படத்தில் ஆதி நடிக்கிறாரா?..
ஹெச். விநோத் அஜித்தை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் ஆதி இணைந்துள்ளதாக தகவல் பரவுகிறது.
அஜித் தமிழ் திரைப்பட உலகில் “தல” ஆக வலம் வந்தவர். இப்போதும் ரசிகர்கள் அவரை செல்லமாக “தல” என்றே அழைக்கிறார்கள். ஆனால் அஜித் சமீபத்தில் தன்னை “தல” என்று தன்னை அழைக்காதீர்கள் என கூறினார். இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
சமீபத்தில் அஜித் நடித்த “வலிமை” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மனதை உருக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது.
படத்திற்கு பல நெகட்டிவ் ரிவ்யூக்கள் வந்திருந்தாலும் ரசிகர்கள் வலிமையை உற்சாகத்தோடு கொண்டாடினர். இதனை தொடர்ந்து “அஜித் 61” திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்தன. அத்திரைப்படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ஆதி அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். ஒரு வேளை அஜித் நடிக்கவிருக்கும் “அஜித் 61” திரைப்படத்தில் ஆதி நடிக்கவுள்ளாரோ என செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் ஆதி தனது திருமண அழைப்பிதழுடன் அஜித்தை திருமணத்திற்கு வரவேற்க நேரில் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதியும் நிக்கி கல்ரானியும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆதியும் நிக்கி கல்ரானியும் “மரகத நாணயம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
“மரகத நாணயம்” திரைப்படத்தில் நிக்கி கல்ரானி தற்கொலை செய்திருப்பார். அவருக்குள் ஒரு ஆணின் ஆவி புகுந்திருப்போம். ஆதி நிக்கி கல்ரானியை ஒரு தலையாக காதலித்திருப்பார். அத்திரைப்படத்தில் இருவரும் சேரமாட்டார்கள். ஆனால் தற்போது இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
