CINEMA
100 நாள் திருமண வாழ்க்கை… ரொமாண்ட்டிகாக கொண்டாடும் ஆதி-நிக்கி கல்ராணி..
திருமணம் ஆகி இதுவரை 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஆதி-நிக்கி கல்ராணி தம்பதியினர் வெளிநாட்டிற்கு ரொமாண்ட்டிக் பயணமாக சென்றுள்ளனர்.
ஆதியும் நிக்கி கல்ராணியும் “மரகத நாணயம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்துள்ளனர். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் இரு வீட்டார் சம்மதத்தோடு உறவினர்கள், நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் “மரகத நாணயம்” திரைப்படம் மட்டுமல்லாது “யாகாவாரயினும் நா காக்க”, “மலுப்பு” போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த செய்தி பரவலாக அறியப்படவில்லை. திடீரென ஒரு நாள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. எனினும் நல்ல பொருத்தமான ஜோடி என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் திருமணம் முடிந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் இருவரும் வெளிநாட்டில் ரொமாண்ட்டிக் ஜோடியாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்கள் இருவரும் பாரீஸுக்கு சென்றுள்ளனர். அங்கே இருவரும் காதல் புறாக்களாக வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
இப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த நிக்கி கல்ராணி “பாரீஸ்.. திருமணமாகி நூறு நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடுகிறோம்” என குறிப்பிட்டு #CityOfLove என்ற ஹாஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கூட இவர்களின் திருமண வீடியோ வெளிவந்தது. அதில் இருவரும் முத்தமிட்டுக்கொண்ட காட்சி பார்வையாளர்களை குஷிப்படுத்தியது. காதல் ஜோடி என்றால் இப்படி இருக்கவேண்டும் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.