Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஆண்டவருக்கு 50 அடி கட் அவுட், 3 லட்சம் மாலை”.. மாஸ் காட்டிய கமல் ரசிகர்கள்

CINEMA

“ஆண்டவருக்கு 50 அடி கட் அவுட், 3 லட்சம் மாலை”.. மாஸ் காட்டிய கமல் ரசிகர்கள்

“விக்ரம்” திரைப்படம் வெளியானதை கொண்டாடும் விதமாக கமல் ஹாசன் ரசிகர்கள் திரையரங்கில் வைத்த 50 அடி கட் அவுட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது. பல காலம் கழித்து கமல் ஹாசனுக்கு மாஸ் ஹிட் ஆக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.

ரசிகர்கள் ஆரவாரமாக “விக்ரம்” திரைப்படத்தை வரவேற்று வருகின்றனர். உலகம் எங்கும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே அதிகமாக வந்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வருடங்களாக கமல் ஹாசனுக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்பதால் “விக்ரம்” திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கமல் ஹாசனுக்கு 50 அடி கட் அவுட் வைத்து ரசிகர்கள் அசத்தியுள்ளனர். மேலும் அந்த கட் அவுட்டிற்கு 3 லட்சம் மதிப்பிலான மாலையையும் அணிவித்து மாஸ் காட்டி உள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

 Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top