CINEMA
ராகவா லாரன்ஸ் படத்தில் 5 ஹீரோயின்களா?? அடேங்கப்பா…
ராகவா லாரன்ஸ் நடித்து வரும் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனராம். யார் யார் தெரியுமா?
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துவரும் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் லாரன்ஸுடன் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் “சந்திரமுகி 2” உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
“சந்திரமுகி 2” திரைப்படத்தை பி. வாசு இயக்கி வருகிறார். “பாகுபலி”, “ஆர் ஆர் ஆர்” போன்ற திரைப்படத்திற்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தோட்டா தரணி கலை இயக்குனராக இணைந்துள்ளார். “சந்திரமுகி” முதல் பாகம் போலவே இத்திரைப்படமும் சிறப்பாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகிகள் குறித்தான ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தில் லட்சுமி மேனன் இணையவுள்ளதாக தகவல் வந்த நிலையில் தற்போது இதில் 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதில் தற்போது இரண்டாவதாக மகிமா நம்பியார் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. மகிமா நம்பியார் “சாட்டை”, “குற்றம் 23”, “புரியாத புதிர்”, “கொடி வீரன்” “அசுர குரு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
