CINEMA
“கண்ணா 4 லட்டு தின்ன ஆசையா?”…
பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன்,கிரித்தி ஷெட்டி, சாய் பல்லவி ஆகியோர் இணைந்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி, சாய் பல்லவி ஆகிய நால்வரும் தற்போது தென்னிந்திய திரையுலகின் “Most Wanted” கதாநாயகிகள் ஆவர்.
பிரியங்கா மோகன் தெலுங்கில் “நானிஸ் கேங்க் லீடர்” என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறியப்பட்டாலும் தற்போது தமிழின் cutest ஹீரோயின்களில் ஒருவர் அவர். அவர் சமீபத்தில் வெளிவந்த“டாக்டர்”, “எதற்கும் துணிந்தவன்”, “டான்” போன்ற திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை தன் வசப்படுத்தினார்.
கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த“ஹீரோ” படத்தில் கதாநாயகியாகவும் நடித்து தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் நுழைந்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த “மாநாடு” திரைப்படத்தில் chubby கன்னங்களுடன் வலம் வந்தது இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது.
கிரீத்தி ஷெட்டியின் மார்க்கெட் தற்போது சூடு பிடித்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. அவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படமான “உப்பண்ணா” திரைப்படத்திலேயே இளைஞர்களை சாய்த்துவிட்டார். தற்போது “வாரியர்” திரைப்படத்தில் “Bullet” பாடலில் எக்குத்தப்பாகி நடனம் ஆடியது ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளது. தமிழில் தற்போது சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவியை பற்றி நமக்கு தெரியாதது எதுவும் இல்லை. பிரேமம் திரைப்படத்தில் “மலர்” ஆக வந்து இளைஞர்களின் மனதில் மலர்ந்தவர். அதன் பின் தமிழ், தெலுங்கு என டாப் மோஸ்ட் ஹீரோக்களுடன் நடித்து வந்தவருக்கு, தற்போது “விராட பர்வம்”, “கார்கி” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது.
இந்நிலையில் இந்நால்வரும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நான்கு பேருமே அல்டிமேட் அழகுடன் க்யூட்டாக உள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.