Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

படுக்கையில் நிர்வாணமாக போஸ் கொடுத்த விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படங்கள்

CINEMA

படுக்கையில் நிர்வாணமாக போஸ் கொடுத்த விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படங்கள்

நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் பெரும்பாலும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற வார்த்தை கூட பொருத்தமாக இருக்கும்.

இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்து வருபவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்திலேயே பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அதனை தொடர்ந்து “துரோகி”, “குள்ளநரிக் கூட்டம்”, “நீர் பறவை”, “முண்டாசுப்பட்டி”, “ஜீவா”, “ராட்சசன்” என வித்தியாசமான கதைக்களத்தில் நடித்தார். சமீபத்தில் கூட “FIR” திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது “மோகன் தாஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜ்வாலா குட்டா என்ற பேட்மின்டன் வீராங்கனையை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் படுக்கையில் படுத்தவாறு நிர்வாணமாக புகைப்படங்களை போஸ் கொடுத்துள்ளார். இப்புகைப்படங்களை அவரின் மனைவியே எடுத்திருக்கிறார்.

இப்புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading

More in CINEMA

To Top