Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” சென்னையில் மட்டும் இவ்வளவு கலெக்சனா??

CINEMA

“விக்ரம்” சென்னையில் மட்டும் இவ்வளவு கலெக்சனா??

“விக்ரம்” திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கல்லா கட்டிருக்கு தெரியுமா?

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் நிறைந்து வழிகிறது. பல திரையரங்குகளில் 24 மணி நேர ஸ்பெஷல் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு முன் வெளிவந்த கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் திரைப்படங்களையும் வீழ்த்தி சாதனை படைத்து வருகிறது ‘விக்ரம்”.

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி இரண்டே வாரங்களே ஆன நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 350 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.

“விக்ரம்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 150 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் சென்னை கலெக்சன் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

“விக்ரம்” திரைப்படம் சென்னையில் சுமார் ரூ. 15 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆகிய நிலையிலும் மக்கள் பெருந்திரளாக குடும்ப குடும்பமாக திரைப்படத்திற்கு சென்று கண்டு கழித்து வருகின்றனர்.

இதனிடையே “விக்ரம்” திரைப்படக்குழு மாபெரும் வெற்றியை தொடர்ந்து “ALL TIME RECORD” புரோமோ ஒன்றை வெளியிட்டனர். அதன் பிறகு ஏஜெண்ட் டீனா காட்சிகளும், சூர்யா கேமியோ ரோலில் கலக்கிய ரோலக்ஸ் காட்சிகளும் வெளியிடப்பட்டது.

இந்த மூன்று காட்சிகளும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த காட்சிகள். குறிப்பாக ஏஜண்டி டீனாவை திரைப்படம் பார்த்தவர்களால் மறக்க முடியாது. கமல் ஹாசன் வீட்டில் வேலைக்காரராக உளவு பார்க்கும் கதாப்பாத்திரமான ஏஜண்ட் டீனா, வில்லன் குரூப் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் எடுத்த Transformation ரசிகர்களை ஓ போட வைத்தது. இந்த கதாப்பாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார். இவர் ஒரு நடன இயக்கனரும் கூட.

Continue Reading

More in CINEMA

To Top