Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சூர்யாவின் பட்டையை கிளப்பும் வாடி வாசல் கிளிம்ப்ஸ் எப்போ ன்னு தெரியுமா?

CINEMA

சூர்யாவின் பட்டையை கிளப்பும் வாடி வாசல் கிளிம்ப்ஸ் எப்போ ன்னு தெரியுமா?

சூர்யா நடிப்பில் உருவாக உள்ள “வாடி வாசல்” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்தான சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.

வெற்றி மாறன் தற்போது “விடுதலை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து “வாடி வாசல்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருந்தாலும் இதனிடையே “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெற்றி மாறன் பிசியாகிவிட்டார்.

 சில மாதங்களுக்கு முன் சென்னையில் “வாடி வாசல்” திரைப்படத்திற்கான பயிற்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி படப்பிடிப்பு தற்போது கிளிம்ப்ஸாக வெளிவர உள்ளது என கூறப்படுகிறது. ஆம்!

வருகிற 23 ஆம் தேதி சூர்யா தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு “வாடி வாசல்” கிளிம்ப்ஸ் வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி மாறனின் சமீப காலத் திரைப்படங்கள் எல்லாம் நாவலை தழுவியே எடுக்கப்படுகிறது. “அசுரன்” திரைப்படம் பூமணி எழுதிய “வெக்கை” நாவலை தழுவி எடுக்கப்பட்டது. அதே போல் “விடுதலை” திரைப்படமும் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சி. சு. செல்லப்பா எழுதிய “வாடி வாசல்” என்ற நாவலை தழுவி தான் சூர்யா நடிக்க உள்ள திரைப்படமும் எடுக்கப்படுகிறது. இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top