CINEMA
“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தடை.. அதிர்ச்சி தகவல்
விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது. ஏன் தெரியுமா?
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் பலரும் மிகவும் வெறித்தனமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தடையாக ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம். அதாவது ஹைதரபாத்தில் தற்போது மழை சூடு பிடித்துள்ளதாம். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளதாம். இவ்வாறு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் ஒரு ரோலில் நடிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.
“வாரிசு” திரைப்படத்தில் விஜய் ஒரு அதிரடி ஹீரோவாக இல்லாமால், “பூவே உனக்காக”, “காதலுக்கு மரியாதை”, “துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய திரைப்படங்களில் தென்பட்ட விஜய் போல் அவரின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
மேலும் “வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சுவாரசியமான குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் மழையால் ஷூட்டிங் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
விஜய் “வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.