Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து உதயநிதியுடன் கூட்டணி வைக்கும் சிம்பு”…?

CINEMA

“விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து உதயநிதியுடன் கூட்டணி வைக்கும் சிம்பு”…?

“விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்திற்கு பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து நடிகர் சிம்பு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வேற லெவலில் ஹிட் ஆன திரைப்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா”. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

“விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் கோலிவுட்டின் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. குறிப்பாக 90’s kidகளின் விருப்பமான திரைப்படங்களிலும் ஒன்று. இப்போதும் இத்திரைப்படத்தை ரசித்து பார்ப்பவர்கள் பலரும் உண்டு. சிம்புவின் திரைப்பட பயணத்தில் ஒரு முக்கிய படமாகவும் இது அமைந்திருந்தது. ஒவ்வொரு காட்சிகளும் மனதை கொள்ளைக் கொள்ளும் வகையில் முழு திரைப்படத்தையும் இயக்கி இருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன். இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்து சொல்லவே தேவை இல்லை. ஏ ஆர் ரகுமானின் இசை பார்வையாளர்களை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

இத்திரைப்படம் வெளியாகி பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் தற்போதும் இத்திரைப்படத்தின் ஆல்பம் பலரின் விரும்பத்தக்க ஆல்பமாக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் மேனன்-சிம்பு-ஏ ஆர் ரகுமான்-உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ஆம்!

அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவர உள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். இந்த Come back –ஐ உணர்த்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தையும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தையும் இணைத்து ஒரு அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…

Continue Reading

More in CINEMA

To Top