Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சூர்யா-சாய் பல்லவி இணையும் புதிய படம் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?

CINEMA

சூர்யா-சாய் பல்லவி இணையும் புதிய படம் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?

சூர்யா தயாரிப்பில் சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வருகிறார்.

சாய் பல்லவி அசுரத்தனமாக நடனமாடுபவர். பிரேமம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் ஆடிய நடனத்தை நாம் மறக்கமுடியாது. மேலும் “ரவுடி பேபி” பாடலில் அவர் ஆடிய நடனம் சூறாவளி போல் இருந்தது.

சமீபத்தில் இவர் நடிப்பில் “விராட பர்வம்” திரைப்படம் வெளியானது. இதில் முழு திரைப்படத்தையும் சுமக்கும் அளவுக்கு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் “விராட பர்வம்” திரைப்படத்தை தொடர்ந்து முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய கதை அம்சம் கொண்ட “கார்கி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

“கார்கி” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த மே மாதம் வெளியானது. அதில் சாய் பல்லவி தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வசனங்கள் பேசுவது போல் சில காட்சிகள் வெளிவந்தன. அதன் மூலம் “கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருவதாக தெரிய வந்தது.

“கார்கி” திரைப்படத்தை 2D என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் கோதிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.

அதாவது “கார்கி” திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் “96”திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top