CINEMA
“என்னோட படம் இவ்வளவு லேட் ஆனதுக்கு சத்யராஜ் தான் காரணம்; சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் தன்னுடைய “பிரின்ஸ்” திரைப்படத்தின் வெளியீடு தாமதம் ஆனதற்கு சத்யராஜ் தான் காரணம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் கே. வி. இயக்கத்தில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் “பிரின்ஸ்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், மரியா என்ற ஆங்கிலேயர் ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
“பிரின்ஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு கலகலப்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப் கே வி ஆகியோர் முதலில் தோன்றுகின்றனர். அப்போது பேசும் சிவகார்த்திகேயன் “இந்த படம் இவ்வளவு லேட் ஆனதுக்கு காரணம் சத்யராஜ் தான். ஏன்னா அவர் பாகுபலில கட்டப்பாவா நடிச்சதுனால நான் சொல்றப்போ தான் படத்தை ரிலீஸ் பண்ணனும் ன்னு ஆர்டர்லாம் போடுறாரு” என கூறும் போது சத்யராஜ் அவருக்கு தெரியாமல் பின்னால் வந்து நிற்கிறார்.
அப்போது சிவகார்த்திகேயன் “எனக்கு டென்ஷன் ஆனா மைண்டு சூடாகிடும். அப்படி சூடாகிச்சு ன்னு வச்சுக்கோங்க..” என கூற வரும்போது பின்னால் நின்று கொண்டிருக்கும் சத்யராஜ் “சூடாச்சுனா?” என கேலியாக கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் சத்யராஜ் பின்னால் நிற்பதை உணர்ந்து “Automatic ஆ Cool ஆயிடும் சார்” என கூறுகிறார்.
அதன் பின் கதாநாயகி மரியாவும் கலந்து கொள்கிறார். நால்வரும் கலகலப்பாக பேசுகின்றனர். இதனிடையில் இயக்குனர் அனுதீப் கே வி “ஒரு ஃபெஸ்டிவல்ல படம் ரீலீஸ் பண்ணனும்” என கூறி பல உலக திரைப்பட விழாக்களின் பெயர்களை சொல்கிறார். அவர் பேசுவதை குறிக்கிட்ட சிவகார்த்திகேயன் கேமராவை பார்த்து “நீங்க Announcement அ போடுங்கங்க” என கூற அப்போது தீபாவளிக்கு “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
