CINEMA
“நாயோடு சாவது எனது அதிர்ஷ்டம்”.. சமந்தாவின் திடுக்கிடும் டிவீட்… உண்மை நிலவரம் என்ன?
நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் “நாயோடு சாவது எனது அதிர்ஷ்டம்” என டிவீட் செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தா தற்போது தென் இந்தியாவின் டாப் மோஸ்ட் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் வெளிவந்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தை தொடர்ந்து சகுந்தலா, குஷி என பல திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கிறது.
சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் நாய் மற்றும் பூனைகளுடன் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “சமந்தா நாய் மற்றும் பூனைகளுடன் தான் ஓர் நாள் தனியாக சாகப்போகிறார்” என டிவீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா “அப்படி இறந்தால் நான் ஒரு அதிர்ஷடசாலி” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்படி டிவீட் போட்டவர் அந்த டிவிட்டை நீக்கியுள்ளார். எனினும் இதனை Screenshot எடுத்து இணையம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.
சமந்தா சில நாட்களுக்கு முன்பு நாக சைதன்யாவிடம் இருந்து பிரிந்தார். இதனை குறிப்பிட்டு தான் கேலி செய்யும் விதமாக அந்நபர் அப்படி பேசியிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கூறிவருகிறார்கள். மேலும் “இது சரியான பதிலடி, இவர்களுடன் இப்படி தான் பேச வேண்டும்” எனவும் பலர் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.
சமந்தா தற்போது இணையத்தில் படு பிசியாக இருக்கிறார். அதுவும் ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் குஷி திரைப்படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சமந்தா விபத்தில் சிக்கி மீண்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
I would consider myself lucky ☺️ https://t.co/QH5XEtfALK
— Samantha (@Samanthaprabhu2) May 27, 2022