CINEMA
RJ பாலாஜி திரைப்படத்தின் புதிய அப்டேட்.. வீட்ல எப்போ விஷேசம்?
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “வீட்ல விஷேசம்” திரைப்படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆர். ஜே. பாலாஜியின் குரல் தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான குரல் என்றாலும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து ஒரு நடிகராக பரவலாக அறியப்பட்டார்.
ஐ பி எல் போட்டிகளில் இவரது கிரிக்கெட் கமென்ட்ரிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. “நானும் ரவுடி தான்” திரைப்படத்தை தொடர்ந்து “எல் கே ஜி” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். “Political satire” வகையரா திரைப்படமான “எல் கே ஜி” ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதனை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். அத்திரைப்படமும் கலக்கலான வெற்றியைப் பெற்றது.
இதனை தொடர்ந்து “வீட்ல விஷேசம்” என்ற திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் “பதாய் ஹோ” என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
ஒரு வயதான தாயிற்கு குழந்தை உண்டாகிறது. ஏற்கனவே திருமண வயதில் அவருக்கு ஒரு பையனும் பதின் வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள். இவர்களை சமூகம் ஏலனமாய் பார்க்கிறது. வீட்டாரால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனினும் அவர்களுக்குள் நடக்கும் பாசப்பிணைப்புகள் மனநிலையை மாற்றுகின்றன. இது தான் இத்திரைப்படத்தின் கதை.
“வீட்ல விஷேசம்” திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். என். ஜே. சரவணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிரீஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram