CINEMA
சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் ராஷ்மிகா.. வேற லெவல்!!
சமந்தா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
“நேஷனல் கிரஷ்” என்று செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது பேன் இந்தியா நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் செய்யும் க்யூட்னஸ்களை ரசிக்க பலரும் இருக்கிறார்கள் என்றாலும் அவரை கலாய்க்கும் நெட்டிசன்களும் உண்டு. சமீப காலமாக அதிக நெகட்டிவிட்டிகளை வாங்கிய நடிகை என்றால் ராஷ்மிகா மந்தனாவை சொல்லலாம். அந்த அளவுக்கு உருவ கேலி செய்யப்பட்டார். “ஆண் போலவே இருக்கிறார்”, “மைக்கேல் ஜாக்சனுக்கு பெண் வேஷம் போட்டது போலவே இருக்கிறார்” என எங்கு திரும்பினாலும் நெகட்டிவிட்டியே வலம் வந்தது.
ஆனால் இதை எல்லாம் ராஷ்மிகா மந்தனா பொருட்படுத்தியதே இல்லை. இது குறித்து பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த நெகட்டிவிட்டியை எல்லாம் நாம் கண்டுகொள்ளக்கூடாது என சிம்பிளாக பதில் சொல்லி கடந்து விடுவார். தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் ராஷ்மிகா. தற்போது “வாரிசு” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதே போல் பாலிவுட்டிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதல் இடத்தை பிடித்துள்ளார் என செய்திகள் வருகின்றன. அதாவது இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவை 32.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
அதற்கு அடுத்த இடத்தில் சமந்தா இருக்கிறார். இவரை 24.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
சமந்தாவிற்கு அடுத்த இடத்தை காஜல் அகர்வால் தக்க வைத்துள்ளார். இவரை 23.4 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதனை கொண்டு தென் இந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா என அறியப்படுகிறது.