CINEMA
எனக்கு வயசாகிடுச்சு, என்னால முடியாது…? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஜே ஜே நாயகி..
டிவிட்டரில் ரசிகரின் கேள்விக்கு “ஜே ஜே” படத்தின் கதாநாயகி அளித்த பதில் தற்பொது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“ஜே ஜே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பூஜா. இவர் முதலில் நடித்த திரைப்படம் “உள்ளம் கேட்குமே” திரைப்படம் தான் என்றாலும் “ஜே ஜே’ திரைப்படம் தான் முதலில் வெளிவந்தது.
அதன் பின் அஜித் நடித்த “அட்டகாசம்”, “ஜித்தன்”, “தம்பி”, “பொறி”, “ஓரம் போ”, “நான் கடவுள்” என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
பூஜா சிங்களர் என்பதால் சிங்கள திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். தமிழில் “நான் கடவுள்” திரைப்படத்திற்கு பின் சில படங்களில் Guest appearance ஆக வந்தார். அதன் பின் சில காலம் கேப் விட்டு “விடியும் முன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
கடைசியாக சில சிங்கள திரைப்படங்களில் நடித்த அவர் பிரஷான் என்ற இலங்கை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மொத்தமாக சினிமாக்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் டிவிட்டர் பக்கத்தில் பூஜாவை குறிப்பிட்டு “Come back குடுங்க” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பூஜா “அய்யோ எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு, 44 வயசாகிடுச்சு, இனி Come Back கொடுக்கனும் ன்னா சித்தி ரோல் தான் பண்ணனும்” என கூறியுள்ளார்.
பூஜா கதாநாயகியாக நடித்த காலத்தில் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. கிளாமர் குயீனாக வந்து 90’s kid-களின் உள்ளதை கவ்விக் கொண்டு போனவர்களில் முக்கியமானவர் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது.