Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள்; வைரல் பிக்சர்ஸ்..

CINEMA

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள்; வைரல் பிக்சர்ஸ்..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வில் வெளியான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தற்போது மகாபலிபுரம் ரிசார்டில் நடைபெறுகிற நிலையில் ரஜினிகாந்த், ஏ. ஆர். ரகுமான், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திருமண நிகழ்வில் இருந்து வெளியான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. அதில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வருகை தரும் வருகை பலகையும், நயன்தாரா தயாரிப்பு நிறுவனமான “ரவுடி பிக்சர்ஸ்” நிறுவனத்தின் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்களும் இடம் பெற்றிருக்கின்றன.

எனினும் இத்திருமணத்தில் 200 பேர்கள் வரை மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் செல்ஃபோன்களை உள்ளே எடுத்துச் செல்ல கூடாது என தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சென்ற வருடம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் மூலம் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அதன் பின்பும் இருவரும் திருமணம் குறித்து மௌனம் சாதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் சர்ப்ரைஸ் செய்தி ஒன்றை கூறினார்கள். அதாவது ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். திருப்பதியில் திருமணம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் அதன் பின் திருமணம் நடைபெறும் இடத்தை மகாபலிபுரம் ரிசார்ட்டிற்கு மாற்றினார்கள். இந்நிலையில் இன்று அந்த ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top