Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நம்ம நக்மாவா இது?, என்ன இப்படி ஆகிட்டாங்க”…

CINEMA

“நம்ம நக்மாவா இது?, என்ன இப்படி ஆகிட்டாங்க”…

பிரபல நடிகை நக்மாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது கொக்கி போடும் அழகால் 80’s kids-களின் மனதை கொள்ளை அடித்து சென்றவர் நக்மா. இவர் நடித்து வந்த காலத்தில் இவரை அடிச்சிக்க ஒரு நடிகை கூட வரவில்லை. தமிழின் மிக முக்கிய நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து கலக்கியுள்ளார்.

அவர் நடித்து வந்த காலத்தில் அப்போதைய இளைஞர்களின் “Most Wanted” கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் டாப் மோஸ்ட் கதாநாயகியாக வளர்ந்தார்.

2006 ஆம் ஆண்டு இது குறித்து “Mid day” பத்திரிக்கையில் பேசிய நக்மா “எனக்கு 9 மொழிகள் தெரியும். ஆதலால் நான் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” என கூறினார். இதில் இருந்தே தெரிந்திருக்கும் நக்மா எப்படிப்பட்ட நடிகை என்று.

நடிகை நக்மா 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் நின்று 4 ஆவது இடத்தை தக்க வைத்தார். அதன் பின் 2015 ஆம் ஆண்டு நக்மா காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான “மகிளா காங்கிரஸ்” இயக்கத்தின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக “நவ் சங்கல்ப் ஷிவிர்” என்ற கூட்டம் உதய்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நக்மா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தான் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நக்மாவை பல நாட்கள் கழித்து பார்த்ததில் 80’s kids-கள் உற்சாகமாக இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by NAGMA (@nagma_actress)

Continue Reading

More in CINEMA

To Top