Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காட்சி; கமல் தொண்டர் செய்த நெகிழ்ச்சி காரியம்; மக்கள் பாராட்டு

CINEMA

கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காட்சி; கமல் தொண்டர் செய்த நெகிழ்ச்சி காரியம்; மக்கள் பாராட்டு

கமல் கட்சித் தொண்டர் கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்த செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே பல நற்பணிகளை செய்து வருகின்றனர். கமல் ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பில் இருந்தே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாறி ரத்த தான முகாம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் வெளியான நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க பேரவை நிர்வாகி சொக்கர் என்பவர் மதுரையில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து அவர்களுக்கு திரைப்படத்தின் டிக்கெட்டுகளையும் வழங்கியுள்ளார். இச்செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு திரைப்படத்தை கண்டு கழித்தனர்.

ரசிகர்களின் வாழ்த்து மழையில் சமூக வலைத்தளமே ஸ்தம்பித்து போனது. அந்தளவிற்கு ரசிகர்கள் “விக்ரம்” திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க பேரவை நிர்வாகி சொக்கர் என்பவர் மதுரையில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top