CINEMA
“நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன், Good Bye…” ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த லோகேஷ் கனகராஜ்..
லோகேஷ் கனகராஜ் சற்று இடைவேளை எடுத்துக்கொள்வதாக கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளிவந்து தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக திகழ்ந்தது. இத்திரைப்படம் கமல் ஹாசன் திரைப் பயணத்திலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாகவும் அமைந்தது.
இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் லோகேஷ் கனகராஜ்ஜின் உதவி இயக்குனர்களுக்கு கமல் ஹாசன் மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
“விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்க உள்ளார் என தகவல் வந்தது. அதனை லோகேஷ் கனகராஜ்ஜும் ஒரு பேட்டியில் உறுதி செய்தார். இத்திரைப்படத்திற்கான ஸ்கிர்ப்ட் வேலைகள் தற்போது சென்றுகொண்டிருக்கிறதாக அறியப்படுகிறது.
“மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் விஜய்யின் சினிமா கேரியரிலேயே வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. அதே போல் லோகேஷ் விஜய்யை வைத்து இயக்கும் புதிய திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்டிற்காக மரண வெயிட்டிங்கில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “சமூக வலைத்தளத்தில் இருந்து சற்று ஓய்வு எடுக்கப்போகிறேன். எனது அடுத்த திரைப்படத்தின் அறிவிப்போடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். அது வரை உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அன்புடன் லோகேஷ் கனகராஜ்” என கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Hey guys ✨
I’m taking a small break from all social media platforms…
I’ll be back soon with my next film’s announcement 🔥
Till then do take care all of you..
With love
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2022