CINEMA
“மார்வெல் கொஞ்சம் ஓரம் போ”.. ராக்கி பாய் “On the way”..
மார்வெல் திரைப்படங்களை ஓரங்கட்டும் வகையில் ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்தப்போகிறது கே. ஜி.எஃப். படக்குழு.
கே. ஜி. எஃப்2 ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச்செய்யவும் தவறவில்லை.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்தது. கே. ஜி. எஃப். திரைப்படம் மட்டுமல்லாது படப்பிடிப்பு செட்டே பயங்கரமாக இருந்தது.
மேலும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தங்களது நினைவுகளையும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் மேக்கிங் வீடியோவில் பகிர்ந்திருந்தனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் மிகவும் பரபரப்பாகவும் நேர்த்தியாகவும் டைரக்ட் செய்திருக்கிறார் என தெரிகிறது . மூன்றாயிரத்திற்கும் மேலான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை எப்படி சமாளித்தார்கள் என்று படக்குழுவினர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மார்வெல் திரைப்படத்திற்கு சமமான ஒன்றை கே. ஜி. எஃப் படக்குழு இறக்கவுள்ளது. அதாவது கே. ஜி. எஃப். சேப்டர் 2-வை தொடர்ந்து கே. ஜி. எஃப். திரைப்படத்தின் சேப்டர் 3 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப். சேப்டர் 3 திரைப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல் கே. ஜி. எஃப். யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்க இருப்பதாக கே. ஜி. எஃப். திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.