Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கமல் எழுதிய லைஃப் டைம் செட்டில்மென்ட் கடிதம்”.. நெகிழ்ச்சியில் லோகேஷ்

CINEMA

“கமல் எழுதிய லைஃப் டைம் செட்டில்மென்ட் கடிதம்”.. நெகிழ்ச்சியில் லோகேஷ்

கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜிற்கு லைஃப் டைம் செட்டில்மண்ட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை “விக்ரம்” திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

 Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”.

“விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 170 கோடிகளுக்கும் மேல் அசூரத்தனமாக வசூல் செய்துள்ளது. பல காலம் கழித்து கமல் ஹாசனுக்கு மாஸ் ஹிட் ஆக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.

ரசிகர்கள் ஆரவாரமாக “விக்ரம்” திரைப்படத்தை வரவேற்று வருகின்றனர். உலகம் எங்கும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களே அதிகமாக வந்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வருடங்களாக கமல் ஹாசனுக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்பதால் “விக்ரம்” திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு தனது கையாலேயே ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் கமல் ஹாசன்.

இக்கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் அதில் “இது எனது லைஃப் டைம் செட்டில்மண்ட் லெட்டர்” என குறிப்பிட்டு “இந்த கடிதத்தை படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாது, நன்றி ஆண்டவரே” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அக்கடிதங்கள் இதோ…

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top