CINEMA
ஜெயம் ரவியின் 30 ஆவது திரைப்படம்… சூப்பர் அப்டேட்..
ஜெயம் ரவியின் 30 ஆவது திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான அப்டேட் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது “அகிலன்”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி தனது 30 ஆவது திரைப்படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இத்திரைப்படத்தை ராஜேஷ் இயக்க உள்ளார். பிரியங்கா மோகன் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார். மேலும் நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஒரு Road movie என தகவல் வருகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “பூமி” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவி தனது 30 ஆவது திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆதலால் இத்திரைப்படம் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக இது திகழ்ந்துள்ளது. சோழ இளவரசனான அருண்மொழி வர்மனின் கதாப்பாத்திரத்திற்கு ஜெயம் ரவி சிறந்த தேர்வாக அமைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடல் வெளிவந்து பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
