Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இரவின் நிழல்” திரைப்படத்தின் வித்தியாசமான புரோமோ..

CINEMA

“இரவின் நிழல்” திரைப்படத்தின் வித்தியாசமான புரோமோ..

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் “இரவின் நிழல்” திரைப்படத்தின் வித்தியாசமான புரோமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பார்த்திபன் தமிழ் திரைப்பட உலகில் எப்போதும் ஒரு புதுமை விரும்பி. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதை களம் அமைந்திருக்கும். அவர் திரைப்படம் மட்டுமல்லாது அவர் ஒரு மேடையில் பேசும் போதே அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் புதுமையானதாக இருக்கும்.

அவரது நிஜ வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் செயல்களும் கூட அப்படித்தான். இதற்கு உதாரணமாக சமீபத்தில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கோபப்பட்டு மைக்கை தூக்கி எறிந்து அந்த மைக் ரோபோ ஷங்கரின் மேல் விழுந்தது. அந்த விஷயம் பெரும் சர்ச்சையாக, பார்த்திபன் ரோபோ ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார். அதுவும் எப்படி என்றால் மிகவும் வித்தியாசமான முறையாக தனித்துவமான வாசகங்களுடன் மன்னிப்பு கேட்டார்.

அதாவது ரோபோ ஷங்கரை நேரில் சந்தித்து முத்தம் இட்டவாறும் மைக்கை கையில் பிடித்தவாறும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் “இரவின் நிழல்” திரைப்படத்தின் வித்தியாசமான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பார்த்திபன் பணத்தை எண்ணும் மிஷின் முன் அமர்ந்திருக்கிறார். காட்சிகளின் பின்னால் ஒரு பாடல் வருகிறது. மூன்று பெண்கள் வெட்கப்படும் அழகை காட்டுகிறார்கள். அதன் பின் வரலட்சுமி சரத்குமார் பெண் சாமியார் போல் வருகிறார். அதன் பின் ஒரு கிரிக்கெட் கிரவுண்டில் பந்து score board திரையில் பட்டு அதன் கண்ணாடி உடைகிறது. அத்திரையில் “Shadow of Night hitting soon” என தோன்றுகிறது. காட்சிகளின் பின்னால் கிரிக்கெட் ரன்னிங் கமென்ட்ரி வருகிறது. இவ்வாறு அந்த புரோமோ அமைந்துள்ளது.

“இரவின் நிழல்” திரைப்படம் உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top