CINEMA
“இந்தியன் 2” மறுபடியும் ஆரம்பிக்கும்… சர்ப்ரைஸ் கொடுத்த கமல்
“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிச்சயம் மீண்டும் தொடங்கும் என கமல் ஹாசன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் அதன் பின் கமல் ஹாசன் விக்ரம் திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கு ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர்.
ஆதலால் “இந்தியன் 2” படபடப்பிடிப்பு அப்படியே முடங்கியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியன் 2” படபடப்பிடிப்பு குறித்து கேட்டபோது “படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என கூறியுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆனது. குறிப்பாக ஏ. ஆர். ரகுமான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின. “கப்பல் ஏறி போயாச்சி” என்ற பாடல் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கும். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் “மாயா மச்சீந்திரா” என்ற பாடலில் பல கிராஃபிக்ஸ் காட்சிகளை அந்த காலத்திலேயே பயன்படுத்தி பார்வையாளர்களை அசரவைத்திருப்பார்கள்.
இந்நிலையில் “இந்தியன் 2” திரைப்படம் 2020 ஆம் ஆண்டு உருவாகி படப்பிடிப்பு பாதியில் நின்றுப் போனது. இத்திரைப்படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்து வந்தனர். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வந்தார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், முதன் முதலாக கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
