Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ரசிகர்களுக்கு “டான்” பிடித்திருக்கிறதா? டிவிட்டர் review..

CINEMA

ரசிகர்களுக்கு “டான்” பிடித்திருக்கிறதா? டிவிட்டர் review..

சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இணையத்தில் ரசிகர்ள் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்?

சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சிக்கே திருவிழா போல் திரையரங்குகளில் கூடி இருந்தனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை பற்றி இணையத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். பெரும்பாலும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் செம்மையாக இருக்கிறது என கூறியிருக்கிறார்கள். பலர் “fun entertainment” என பகிர்கிறார்கள்.

சிலர் “கல்லூரி காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஒரு சிம்பிளான கமர்சியல் திரைப்படம்” என பகிர்கிறார்கள். சிலர் “ஃபஸ்ட் ஆஃப் காமெடியாக போகிறது. செகண்ட் ஆஃப் அப்பா மகன் சென்டிமெண்ட் ஓவராக இருக்கிறது” என அவர்களது கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

சிலர்” திரைப்படத்தின் பாடல்கள் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது, நாமே தியேட்டரில் எழுந்து நடனம் ஆட தூண்டும் வகையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சிலர் சிவகார்த்திகேயனின் நடனம் மாஸ் என கூறுகிறார்கள்.

சிலர் ஜி,பி, முத்து பாணியில் சிவகார்த்திகேயனை” நீ ஒரு ஆர்டிஸ்ட் ன்னு நிரூபிச்சிட்டலே” என கூறியுள்ளனர். சிலர் “பள்ளி பருவ காட்சிகள் நன்றாக இருக்கிறது, ஆனால் பாடல்கள் தான் மிகவும் மோசமாக காட்சிப் படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

சிலர் “எஸ். ஜே. சூர்யா தான் மாஸ், படத்தில் அவர் தான் நடிப்பில் கலக்கியிருக்கிறார்” என கூறுகின்றனர்..

Continue Reading

More in CINEMA

To Top