Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“டான்” திரைப்படம் வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸ் எவ்வளவு தெரியுமா?

CINEMA

“டான்” திரைப்படம் வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸ் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இதனை தொடர்ந்து “டான்” திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 60 கோடிக்கும் மேல் கலெக்சன் பார்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல் சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் சுமார் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“டான்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார் என பரவலாக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து கண்களுக்கு காட்சி தருகிறார். அதை தாண்டி நடிப்பில் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை என விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன. பால சரவணன், ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ராதாரவி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா தான். அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பால் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் என பல சினிமா விமர்சகர்கள் எழுதி வருகின்றனர்.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும் பாடல்கள் காட்சிப் படுத்தப்படிருந்த விதம் சுமாராகவே இருக்கிறது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை. ஒரு matured இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top