Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மகனின் பிறந்த நாளுக்கு தனுஷ் வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படம்…

CINEMA

மகனின் பிறந்த நாளுக்கு தனுஷ் வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படம்…

நடிகர் தனுஷ் தனது இளைய மகனின் பிறந்த நாளுக்கு வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படத்தை பாருங்க..

தனுஷ் தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். அவர் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. அதன் பின் “சார்”, “வாத்தி”, “கேப்டன் மில்லர்” ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

தனுஷ் நடித்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வருகிற ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற திரைப்படமும் வெளிவர தயாராக உள்ளது. இதில் தனுஷ் Cow Boy ஆக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை முடித்து கொண்டனர். இது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட தம்பதியினர் பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இருவரின் பிரிவிற்கு பின் தனுஷ் தனது மகன்களுடன் பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தனுஷிற்கு மொத்தம் இரண்டு மகன்கள் உண்டு. மூத்தவர் பெயர் யாத்ரா, இளையவர் பெயர் லிங்கா.

இந்நிலையில் நேற்று இளைய மகன் லிங்காவின் பிறந்த நாள் என்பதால் தனுஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது கிரிக்கெட் விளையாடிய போது லிங்காவை தனது தோள் மீது தூக்கி வைத்தவாறு இரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், வெளியிட்டுள்ளார்.

அதில் “இனிய மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் லிங்கா பேபி. எனது வாழ்க்கையின் ஒளியாக இருந்தமைக்கு மிகவும் நன்றி” என பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top