CINEMA
சீயானின் உடல் நிலை எப்படி இருக்கிறது?? மருத்துவமனை வெளியிட்ட தகவல்
சீயான் விக்ரம் உடல் நிலை மோசமானதின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.
சற்று நேரத்திற்கு முன் நடிகர் சீயான் விக்ரம் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவரை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவருக்கு Chest Discomfort என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை விக்ரமின் உடல் நிலை குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதில் “தமிழின் முன்னணி நடிகரான விக்ரம் சிறிது நேரத்திற்கு முன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு chest discomfort ஏற்பட்டிருந்தது. எங்கள் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமல்ஹாசனுக்கு பின் பல வேடங்களில் நடிக்கும் திறமை பொருந்திய நடிகர் என்றும் கூறலாம்.
சிறு வேடம் என்றாலும் அந்த வேடத்திற்காக இவர் செய்யும் மெனக்கடல்கள் ரசிகர்களை “ஓ” போட வைக்கும். இவர் நடிப்பில் தற்போது “கோப்ரா”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன.
இன்று “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் விக்ரம் தான் முக்கிய நடிகராக திகழ்வதாக தெரிகிறது.
சீயான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதையம்சமாக அமைய உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
