CINEMA
கின்னஸ் சாதனைகளை படைக்கப் போகும் சுதந்திர தின விழாவில் பங்குபெறும் அல்லு அர்ஜூன்??
கின்னஸ் சாதனைகளை படைக்கப் போகும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் பங்குபெற உள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் வருகிற சுதந்திர தினத்தை இந்திய மக்கள் விமரிசையாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறு வருகிற சுதந்திர தின கொண்டாட்டம் வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு நிகழ்வாக இடம்பெறப்போகிறது. ஆம்!
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது. நியூ யார்க்கை சேர்ந்த “Federation of Indian Associations” என்ற அமைப்பு இந்த கின்னஸ் சாதனைகளை படைக்கப்போகும் நிகழ்வை நிகழ்த்த உள்ளது.
அதாவது இந்த விழாவில் இரண்டு கின்னஸ் சாதனையை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக பல வித்தியாசமான கொடிகளை ஒரே நேரத்தில் பறக்கவிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒரு மிகப்பெரியம் குழு டமாரம் அடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கின்னஸ் சாதனைகளை படைக்கப் போகும் இந்திய சுதந்திர தின பேரணியை பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி வழிநடத்த உள்ளார். இது நியூ யார்க்கில் “Federation of Indian Associations” நடத்தும் 40 ஆவது இந்திய சுதந்திர விழா பேரணி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த அமைப்பு நடத்திய சுதந்திர தின பேரணிகளில் தமன்னா, அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் ஆகிய நடிகர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அல்லு அர்ஜூன் சமீபத்தில் நடித்த “புஷ்பா” திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.