CINEMA
விமானத்தில் அகப்பட்ட அஜித்… திடீரென வைரல் ஆகும் வீடியோ
விமானத்தில் திடீரென தன் குடும்பத்துடன் அகப்பட்ட அஜித்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த பல நாட்களாக வித விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கப்பல், ஹோட்டல், என அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கங்கெல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள் போல. இந்த இடைவேளையில் அஜித் தனது கனவு பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் பைக்குடன் ஐரோப்பா நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.
சென்ற வாரம் அஜித் தனது ரசிகருக்கு கைப்பட எழுதிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வைரல் ஆனது. அதனை தொடர்ந்து நேற்று அஜித் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.
இந்நிலையில் அஜித் தனது குடும்பத்துடன் விமானப் பயணம் செய்யும் வீடியோ ஒன்று திடீரென வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ..
#AK sir with Family #Ajithkumar pic.twitter.com/qkw1qximLM
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) July 5, 2022
இந்த வீடியோவை பார்க்கையில் இது என்றோ அஜித் தனது குடும்பத்துடன் பயணித்த வீடியோ போல் தெரிகிறது. அஜித் இதில் “வேதாளம்” திரைப்பட கெட் அப்பில் தென்படுகிறார். இதனை வைத்து “வேதாளம்” திரைப்படம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தன்னுடைய குடும்பத்துடன் விமனத்தில் பயணித்த போது எடுத்த வீடியோ போல் தெரிகிறது. எனினும் தற்போது இந்த வீடியோ திடீரென இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
