CINEMA
ரசிகரின் சட்டையில் அஜித் செய்யும் காரியத்தை பாருங்க…
ரசிகரின் சட்டையில் அஜித் தனது கையெழுத்தை இட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த பல நாட்களாக வித விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கப்பல், ஹோட்டல், என அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கங்கெல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள் போல. இந்த இடைவேளையில் அஜித் தனது கனவு பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் பைக்குடன் ஐரோப்பா நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.
சென்ற வாரம் அஜித் தனது ரசிகருக்கு கைப்பட எழுதிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வைரல் ஆனது. அதனை தொடர்ந்து அஜித் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.
இந்நிலையில் பாரிஸின் ஈஃபிள் டவர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அஜித், தனது ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த ரசிகரின் டீ சர்ட்டில் தனது கையெழுத்தை போட்டுத் தந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Latest video of #Ajith sir#AjithKumar #AK61 pic.twitter.com/mrSSd5XCUY
— Ajith Network (@AjithNetwork) July 11, 2022
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘AK 61” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தான் அஜித் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். வெகு விரைவில் “AK 61” திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.