Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெறித்தனமா ஒர்க் அவுட் பண்றாங்களே… ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

CINEMA

வெறித்தனமா ஒர்க் அவுட் பண்றாங்களே… ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த மாஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமாத்துறையை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகள் மிகவும் கட்டுக்கோப்பாக தங்கள் உடலை பார்த்துக்கொள்வார்கள். இது நடிகைகளுக்கு மட்டுமல்லாது சினிமாத்துறையில் கேமரா பின்னால் உழைக்கும் பெண்களுக்கும் உடல் வலிமை என்பது முக்கியமான ஒன்றாக படுகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது விடாத உடற்பயிற்சியால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்பவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உண்டு.

நல்லபடியாக போய்க்கொண்டிருந்த இந்த தம்பதியினரின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனி பாதையில் பிரிந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “3”, “வை ராஜா வை” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் “விசில்”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு பின்னணி குரலாகவும் திகழ்ந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஜிம்மில் பல உடற்பயிற்சி உபகரணங்களை லாவகமாக உபயோகித்து வியர்வையில் குளித்தபடி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த பகிர்ந்த இந்த வீடியோ பலருக்கும் உடற்பயிற்சி குறித்த உத்வேகத்தை அளிப்பதாக பலரும் கம்மெண்ட்டுகளில் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top