GALLERY
“வாழைப்பழ உடையில் மினுமினுக்கும் தமன்னா”; கிளாமர் புகைப்படங்கள்
நடிகை தமன்னா வாழைப்பழ உடையில் தான் எடுத்த ஹாட் ஃபோட்டோஷூட்டுகளை பகிர்ந்து காண்பவர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
கோலிவுட் டோலிவுட் என பல மொழி படங்களில் ‘ஹாட் பீஸ்” ஆக வலம் வருபவர் தமன்னா. பல படங்களில் தனது கொடி இடையை காட்டி 90s kids-கள் மட்டுமல்லாமல் 2k kids-களின் தூக்கத்தையும் கெடுத்தவர்.
“அயன்” “சிறுத்தை” “சுறா” “தில்லாலங்கடி” ஆகிய படங்களில் அள்ள அள்ள குறையாத கவர்ச்சியுடன் தனது ரசிகர்களுக்கு விருந்து வைத்த இவர், இப்போதும் அதே வாலிப வனப்போடு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எப்போதும் கிளாமர் லுக்கில் வலம் வந்த இவர் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த “நவம்பர் ஸ்டோரீஸ்” வெப் சீரீஸில் மூலம் தனது நடிப்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்தினார். சிங்கிள் ஆளாக வெப் சீரீஸின் முழு கதையையும் தோளில் தாங்கிய கதாப்பாத்திரமாக நடித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் “ஓ” போட வைத்தார்.
விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, பிரபு தேவா, கார்த்தி, விஷால் போன்ற தமிழின் முக்கிய கதாநாயகர்கள் பலருடன் மட்டுமல்லாது தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜூன், ஜூனியர் என். டி. ஆர்., ராம் சரண், பவன் கல்யாண், நாக சைதன்யா போன்ற பலருடனும் ஜோடியாக கலக்கி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாது ஹிந்தியில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் போன்றோருடனும் நடித்துள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக வலம் வந்தாலும் எப்போதும் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க மறந்ததில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வாழைப்பழம் போன்ற வலுவலுப்பான உடையில் சிக்கென சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை கண்ட ரசிகர்கள் பலரும் கவர்ச்சி போதையில் திக்கு முக்காடி வருகின்றனர்.
