GALLERY
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேனா? அதுல்யா விளக்கம்..
பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என பல செய்திகள் பரவிய நிலையில் சமீபத்தில் அதுல்யா ரவி கொடுத்த பேட்டியில் இது குறித்து தெளிபடுத்தியுள்ளார்.
பொதுவாக நடிகைகள் தங்களது முக அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது வழக்கம் தான். ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரைக்கும் இது மிகவும் சகஜமான ஒன்று.
இந்த நிலையில் தற்போது நடிகை அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என சமீப காலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கருத்துகளை கூறிவருகின்றனர்.
“ஒரு வேளை அவர் உண்மையிலேயே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரோ?” என்ற கேள்வியும் எழுந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார் அதுல்யா ரவி.
அப்போது நிரூபர் அவரிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அதுல்யா ரவி “இது போன்ற விஷயத்துக்கெல்லாம் எனது குடும்பத்தினர் எனக்கு அனுமதி தரமாட்டார்கள். ஒருவர் வயதாக வயதாக அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அது போல் தான் மெச்சூரிட்டி வர வர எனக்கு இது போன்ற மாற்றங்கள் தெரிகிறது.
மேலும் நான் யோகா செய்கிறேன். அதனால் கூட இப்படி ஒரு மாற்றம் வந்திருக்கலாம். அவ்வளவுதானே தவிர நான் எந்த சர்ஜரியும் செய்யவில்லை” என கூறினார். இதனை வைத்து அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என உறுதியாகிறது.
அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதன் பின் “ஏமாளி”, “அடுத்த சாட்டை”, “நாடோடிகள் 2”, “முருங்கைக்காய் சிப்ஸ்”, “வட்டம்”, “கேடாவர்” என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுல்யா ரவி.