GALLERY
சிவாங்கி இவ்வளவு அழகா…? மாடர்ன் உடையில் ஒரு மஹாலட்சுமி….
சிவாங்கி மாடர்ன் உடையில் கலக்கும் பல ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டவர் சிவாங்கி. இவர் தற்போது “குக் வித் கோமாளி” மூன்றாவது சீசனில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் “சூப்பர் சிங்கர்” 7 ஆவது சீசனில் கன்டெஸ்டண்டாக கலந்து கொண்டு டாப் 6க்கு முன்னேறினார். சிவாங்கி மிகவும் அருமையாக பாடுவார். இவர் தனி ஆல்பம்களில் இருந்து திரைப்பட பாடல்கள் வரை பல பாடல்களை பாடியுள்ளார்.
சிறு வயதில் “பசங்க” திரைப்படத்தில் இடம்பெற்ற “அன்பாலே” என்ற பாடலை பாட்டியிருப்பார், அதன் பின் “முருங்கக்காய் சிப்ஸ்”, “என்ன சொல்லப் போகிறாய்”, “வேலன்”, “கூகுள் குட்டப்பா” ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
தனி ஆல்பம்களை பொருத்தவரை “சொல்ல மாட்டேன் போ”, “அஸ்கு மாரோ”, “அடிபொளி”, “நோ நோ”, “சாயா”, “வெண்ணிலாவும் பொன்னி நதியும்”, “மௌனமாய்”, “முட்டு முட்டு” ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். இதில் குறிப்பாக “அஸ்கு மாரோ” பாடல் பிரபலமாக பலராலும் ரசிக்கப்பட்டது. இதனை சிவாங்கி தெலுங்கிலும் பாடியிருப்பார்.
சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் ஷிவாங்கி நடித்திருந்தார். மேலும் “காசேதான் கடவுளடா”, வடிவேல் நடிப்பில் வெளிவர இருக்கும் “நாய் சேகர்” போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
எப்போதும் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல் திரியும் சிவாங்கி, திடீரென மாடர்ன் மஹாலட்சுமியாக மாறியுள்ளார். வண்ண உடையில் கலக்கலாக சிவாங்கி எடுத்த பல ஃபோட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நம்ம சிவாங்கியா இது” என வாயை பிளக்கின்றனர்.
